காவிரி ஆற்றில் நடப்பு தென்மேற்கு பருவமழை சீசனில் 28 டி.எம்.சி பற்றாக்குறை என்று கர்நாடகா அரசிடம் தமிழக அரசு கூறியுள்ளது. அதுமட்டுமின்றி ஆகஸ்ட் 14ஆம் தேதியில் இருந்து இம்மாத இறுதி வரை தேவைப்படும் 24 ஆயிரம் கன அடி நீரை பிலிகுண்டுவிற்கு திறந்துவிட கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது முறையாக விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 25) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒரு சராசரி ஆண்டில் கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் திறந்துவிட வேண்டிய நீரின் அளவை எவ்வளவு என்று பார்த்துவிடலாம்.
கர்நாடகா வழங்க வேண்டிய நீர்
ஜூன் – 9.2 டி.எம்.சிஜூலை – 31.2 டி.எம்.சிஆகஸ்ட் – 46 டி.எம்.சிசெப்டம்பர் – 36.8 டி.எம்.சிஅக்டோபர் – 20.2 டி.எம்.சிநவம்பர் – 13.8 டி.எம்.சிடிசம்பர் – 7.3 டி.எம்.சிஜனவரி – 2.8 டி.எம்.சிபிப்ரவரி முதல் மே மாதம் வரை – 2.5 டி.எம்.சி
Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.
கர்நாடகா பிரமாண பத்திரம்
முன்னதாக கர்நாடகா அரசு தங்கள் தரப்பில் பிரமாண பத்திரத்தை நேற்று தாக்கல் செய்தது. இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தமிழகத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, குறுவை சாகுபடிக்காக தமிழகம் அதிகப்படியான நீரை பயன்படுத்தியுள்ளது. 69 டி.எம்.சி நீரை தேவையின்றி பயன்படுத்தியுள்ளனர். காவிரி நதிநீர் ஆணையம் வரையறுத்த அளவை முறையாக பின்பற்றவில்லை.
பருவமழை ஏமாற்றம்
அதுமட்டுமின்றி நடப்பாண்டு பருவமழை நன்றாக பெய்திருப்பதாக தமிழகம் கூறியிருப்பது முற்றிலும் தவறு. ஏதோ ஒரு அனுமானத்தின் அடிப்படையில் கூறியுள்ளது. நடப்பாண்டை பொறுத்தவரை 25 சதவீதம் பருவமழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது கர்நாடகா விவசாயிகளை பெரிதும் பாதிக்கும். மேலும் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்சினையையும் ஏற்படுத்தும்.
தமிழக அரசு எதிர்ப்பு
இதனால் நடப்பாண்டு போதிய நீரை திறந்துவிட முடியவில்லை. மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தீவிரமாக போராடி வருகிறது. இதற்கு தேவையின்றி தமிழக அரசு எதிர்ப்பை பதிவு செய்து கொண்டிருக்கிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தற்போதைய பிரச்சினைகள் எதுவும் வருங்காலத்தில் வராது. அதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி கர்நாடகா மாநிலத்திற்கு நடப்பு 2023-24 நிதியாண்டில் 4 அணைகளில் இருந்து 200 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுகிறது.
Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கர்நாடகாவின் தேவை
அடுத்து வரும் காலகட்டங்களில் 77 டி.எம்.சி தண்ணீரின் தேவையுள்ளது. ஏனெனில் பாசனம், குடிநீர் உள்ளிட்ட தேவைகள் அதிகமாக இருக்கின்றன. இதுதான் கர்நாடகாவின் தற்போதைய நிலை. தமிழகத்தின் குற்றச்சாட்டு தவறானது. காவிரி நீர் பங்கீட்டில் நடுவர் மன்ற உத்தரவை சரியான முறையில் செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் தமிழக அரசின் அடுத்தகட்ட நகர்வு எப்படி இருக்கும் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.