பாஜக ரூ.200தான் குறைச்சது – நாங்க ரூ.500க்கு சிலிண்டரே தர்றோம்.. காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு!

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். எனினும் கடந்த சில மாதங்களில் சிலிண்டர் விலை படிப்படியாக அதிகரித்து ஆயிரம் ரூபாயைத் தாண்டியது. விலைவாசி உயர்வினால் துன்புறுவது ஒரு பக்கம் இருக்க சிலிண்டர் விலையும் பொதுமக்களுக்கு அதிர்ச்சி தந்தது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிப்பட்ட தகவலை தெரிவித்தார்.

நாட்டுக் கோழி, மட்டன்… வெளுத்துக்கட்டிய இம்ரான் கான்… சிறையில் இவ்ளோ சொகுசு வசதிகளா?

சென்னையைப் பொறுத்தவரை வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1,118-க்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலைக் குறைப்பின் மூலம் இனி சிலிண்டர் 918 ரூபாய்க்கு விற்பனையாகும். பொதுமக்கள் மத்தியில் இந்த விலை குறைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், 5 மாநிலத் தேர்தலை மனதில் வைத்தே சிலிண்டர் விலை குறைக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இதுகுறித்து
காங்கிரஸ்
தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், “எப்போது வாக்கு வங்கி சரிய ஆரம்பிக்கிறதோ அப்போது தேர்தல் அன்பளிப்புகளை விநியோகிக்க ஆரம்பிக்கிறது பாஜக. மக்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தை கொள்ளையடித்த இரக்கமற்ற மோடி அரசாங்கம், இப்போது தாய்மார்களிடமும் சகோதரிகளிடமும் தனது போலியான நல்லெண்ணத்தை காட்ட முயல்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் கடந்த ஒன்பதரை ஆண்டுகளுக்கு முன்பு 499 ரூபாய்க்கு விற்ற சிலிண்டர் தற்போது 1,100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 9 வருடங்களாக மக்களின் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருந்த போதெல்லாம் ஏன் இந்த அன்பு பரிசு நினைவுக்கு வரவில்லை. உங்களின் பத்து ஆண்டுகால பாவங்கள் கழுவவேபட முடியாதது.

ஓடோடி உதவிய பிடிஆர் : அந்த மனசுதான் சார் கடவுள்.. துயரத்திலும் உருகிய உ.பி மக்கள்!

கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக மக்களை டார்ச்சர் செய்த பாஜக அரசுக்கு தேர்தல் நேரத்தில் லாலிபாப் அளிப்பது வேலைக்கு ஆகாது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். பாஜகவால் அமல்படுத்தப்பட்ட பணவீக்கத்தை சமாளிக்க பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு 500 ரூபாய்க்கு சிலிண்டர்களை வழங்க உள்ளது.

ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்கள் ஏற்கனவே இதை அமல்படுத்தியுள்ளன. கஷ்டங்களால் கொதித்துப் போய் உள்ள மக்களின் கோபத்தை வெறும் 200 ரூபாய் தள்ளுபடியில் 2024ஆம் ஆண்டு குறைத்துவிட முடியாது என்பதை மோடி அரசு உணர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.