Thani Oruvan 2 : வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு – மித்ரனைத் தேடி வரும் எதிரி யார் ??

தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டணியில் ஒன்று தான் இந்த அண்ணன் தம்பியான மோகன் ராஜா ஜெயம் ரவி கூட்டணி. ‘ஜெயம்’, ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தில்லாலங்கடி’, ‘தனி ஒருவன்’, என ஆறு வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கி இந்திய அளவில் சாதனை படைத்துள்ள சகோதரர்களான இயக்குனர் மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் ஏழாவது முறையாக ‘தனி ஒருவன் 2’ திரைப்படத்திற்காக இணைகின்றனர்.

மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும்

முன்னதாக, 2015 ஆகஸ்ட் மாதம் இவர்களின் தனி ஒருவன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தனி ஒருவன் படம் ரிலீஸ் ஆகி 8 வருடத்தை நிறைவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. வெற்றிப் படங்களை தொடர்ந்து படைத்து வரும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 26-வது திரைப்படமாக ‘தனி ஒருவன் 2’-வை அறிவித்துள்ளனர்.

தனி ஒருவன் 2

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

இந்த படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்க ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இதில் நடிக்கவிருப்பதாகவும் அறிவித்தனர். தனி ஒருவன் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவியும் நயன்தாராவும் ‘தனி ஒருவன் 2’-க்காக மோகன் ராஜா இயக்கத்தில் மீண்டும் இணைகின்றனர். மக்கள் மனதில் முத்திரை பதிக்கும் அழுத்தமான படங்களை தொடர்ந்து இயக்கி வரும் மோகன் ராஜாவும், சவாலான வேடங்களில் சளைக்காமல் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுள்ள நடிகர் ஜெயம் ரவியும் ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

8 years of Thani oruvan : தனிஒருவன் நினைத்துவிட்டால் இந்த உலகத்தில் தடைகள் இல்லை !!

சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என முத்திரை பதித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், ‘தனி ஒருவன் 2’ அதன் மற்றுமொரு மைல்கல்லாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இப்படத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தியும் நிர்வாக தயாரிப்பாளராக எஸ் எம் வெங்கட் மாணிக்கமும் பணியாற்றுகின்றனர். சர்வதேச தரத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளார்கள். நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் 26-வது திரைப்படமாக அமையவுள்ள ‘தனி ஒருவன் 2’-வை மோகன் ராஜா இயக்க ஜெயம் ரவி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த படத்தின் அறிவிப்பு ப்ரோமோவும் நேற்று வெளியானது. அந்த வகையில், தனி ஒருவன் படத்தின் இயக்குனர் மோகன் ராஜா, “AGS நிறுவனத்துடன் மூன்றாவது முறையும், நயன்தாராவுடன் நான்காவது முறையும், தம்பி ஜெயம் ரவியோடு ஏழாவது முறையும், அதுவும் என் 11வது படத்தில் இணைந்து பணியாற்றுவது பெருமையாக உள்ளது, ” என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

தனி ஒருவன் முதல் பாகத்தில், மித்ரன் எதிரியைத் தேடி போவார், அனால் இந்த பாகத்தில், எதிரி மித்ரனைத் தேடி வருவார் எனவும் ப்ரோமோவில் கூறியிருப்பது எதிர்பார்ப்பை தூண்டுகிறது. அது மட்டுமல்லாமல், முதல் பாகத்தில், “உன் எதிரி யாரென்று சொல், நீ யாரென்று சொல்கிறேன்” என்னும் வாக்கியம் கூறப்பட்டிருக்கும். அனால், இந்த இரண்டாம் பாகத்தில், “நீ யாரென்று சொல், உன் எதிரி யாரென்று சொல்கிறேன்” என ப்ரோமோவில் காட்டி இருக்கின்றனர். மொத்தத்தில், அறிவிப்பு ப்ரோமோவை வெளியிட்டு ஆர்வத்தை தூண்டி இருக்கின்றனர் தனி ஒருவன் 2 படக்குழுவினர். இந்த படத்தின் படப்பிடிப்பு 2024ல் தொடங்கும் எனவும் அறிவித்திருக்கின்றனர்.

Guest Author : Radhika Nedunchezhian

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.