டாஸ்மாக்கில் டிஜிட்டல் விலைப்பட்டியல் | ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்ட விதைப்பந்துகள்! News In Photos

உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு, கோவை ரேஸ்கோர்ஸில் மின்சார வாகனத்தை ஓட்டி பார்த்த மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி.
விழுப்புரம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் தே.மு.தி.க முற்றுகை போராட்டம்!

வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தியதை கண்டுக் கொள்ளாத மத்திய அரசை கண்டித்தும், அந்த கட்டணங்களை குறைக்க வலியுறுத்தியும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில், தேமுதிக-வினர் முற்றுகை போராட்டம்

விழுப்புரம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் தே.மு.தி.க முற்றுகை போராட்டம்!
தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணியின் முதல் ஆலோசனைக் கூட்டம்.
அமைச்சர்கள் துரை முருகன், உதயநிதி ஸ்டாலின், கே என் நேரு, சேகர் பாபு, மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணியின் முதல் ஆலோசனைக் கூட்டம்.
ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து அங்கு பதற்ற நிலை உள்ளதால் வேலூரில் ஆந்திர செல்லும் பேருந்துகள் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
திருநெல்வேலி: தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் நடத்திய விழிப்புணர்வு வீதி நாடகம்.
மெட்ரோ பணி.. அடையாறு பாலத்தில் போக்குவரத்து நெரிசல்
இடம்: ராஜா அண்ணாமலைபுரம்
மெட்ரோ பணி.. அடையாறு பாலத்தில் போக்குவரத்து நெரிசல்
இடம்: ராஜா அண்ணாமலைபுரம்
நடை பயணத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் தலைப்பாகைகட்டி நடந்து வந்த அண்ணாமலை.
தேனி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற என் மண் என் மக்கள் நடை பயணத்தில் அண்ணாமலைக்கு கட்சி தொண்டர்கள் மன்னர் தலைப்பாகை அணிவித்தனர்
ஈரோடு தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ரூபாய் 10 முதல் 20 வரை விற்பனை செய்யப்படுகிறது
தெலங்கான மாநிலம் வாராங்ல் மாநிலத்தில் இருந்து ஈரோட்டிற்கு இரயில் மூலம் ரேஷன் கடைக்கு அரிசி வந்தது
கண்தான விழிப்புணர்வு வாரத்தை அடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கருவிழி மாற்று சிகிச்சை மூலம் பார்வை பெற்றவர்கள் நன்றி கூறினர்
சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து நாகர்கோவில் திருப்பதிசாரம் டோல்கேட் முன்பு தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் “உலக வரலாற்று மாநாட்டை” சபாநாயகர் செல்வம் தொடங்கிவைத்து பேசினார்
விருதுநகர் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் செங்கற்கள் மற்றும் கருங்கற்களாலான சுவர்கள் கண்டறியப்பட்டுள்ளது
டாஸ்மாக் கடைகளில் மது வகைகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் ஊட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் டிஜிட்டல் விலைப்பட்டியல் பொருத்தப்பட்டுள்ளது.
உலக சுற்றுப்புற இயற்கை சூழ்நிலையைப் பாதுகாக்கும் விதமாக 4,00,000 நாட்டு விதைப்பந்துகள் ஐஎன்எஸ் பருந்து ஹெலிகாப்டர் மூலம் மாவட்ட வனத்துறை மற்றும் அமிர்தானந்தமயி மடம் இணைந்து இராமநாதபுரத்தில் தூவப்படுகின்றன
விருதுநகர்: பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கிய எம்.பி.மாணிக்கம் தாகூர்
புதுச்சேரியில் மாநில அளவிலான பழமை வாய்ந்த “பெத்தங்கான் குண்டு” விளையாட்டு போட்டி நடைபெற்றது.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் மழை பெய்தது. அப்பொழுது மழைத்துளிகளினூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும் போது ஏற்பட்ட வானவில்.
சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (OTA) நடைபெற்ற கண்கவர் ராணுவ அணிவகுப்பு மூலம் அதிகாரிகள் பயிற்சி பெற்றவர்கள் இன்று முறையாக இந்திய ராணுவத்தின் சேர்க்கப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.