ஹிந்தி நடிகை பரிணீதி சோப்ரா திருமணம்

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பரிணீதி சோப்ரா. அவருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தாவுக்கும் உதய்ப்பூரில் நேற்று திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இத்திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். பல சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தனது திருமணம் குறித்து புகைப்படங்களுடன் எக்ஸ் தளத்தில், “காலை உணவு மேஜையில் நடந்த முதல் அரட்டையில் இருந்து, எங்கள் இதயங்களுக்குத் தெரிந்தது. இந்த நாளுக்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்தேன். கடைசியாக திரு மற்றும் திருமதியாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். ஒருவர் இல்லாமல் மற்றொருவர் வாழ்ந்திருக்க முடியாது. நமது பயணம் தொடங்குகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.