சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பேமஸ் ஆன பாலா, மகளுக்காக உதவி கேட்ட தாய்க்கு ஓடி போய் உதவி செய்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் பாலா. ரைமிங் காமெடியால் ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்த இவருக்கு அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
