சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி நடைபெறும் என சொல்லப்பட்டது. ஆனால் திடீரென இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதேநேரம் அதிரடியாக லியோ செகண்ட் சிங்கிள் நாளை வெளியாகும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. {image-f7chojlxeaauviw-1695824845.jpg
