டில்லி மக்களவையில் தரக்குறைவாகப் பேசியதால் கடும் கண்டனத்துக்குள்ளான பாஜக நாடாளுமன்ற உறுப்பினருக்கு அக்கட்சி புதிய பொறுப்பை அளித்துள்ளது. டில்லி தெற்கு தொகுதியின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான ரமேஷ் பிதுரி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் சந்திரயான் 3 குறித்த விவாதத்தின் போது, சக நாடாளுமன்ற உறுப்பினரான பகுஜன் சமாஜ் கட்சியின் டேனிஷ் அலியை நோக்கிக் கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சு ‘இஸ்லாமிய வெறுப்பு பேச்சு’ என பல்வேறு அரசியல் கட்சிகள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தன. பிதுரியின் பேச்சுக்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் […]
