லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.
விக்ரம் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஜய்யுடன் இரண்டாவது முறையாகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் எகிறிய வண்ணமிருக்கிறது.
அக்டோபர் 19 -ம் தேதி படம் திரைக்கு வர உள்ளது. இதற்கிடையில் இசை வெளியீட்டு விழாவும் ரத்தானது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றதை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ‘லியோ’ படக் குழு தினமும் அப்டேட்களை அள்ளித் தெளித்த வண்ணமிருக்கின்றனர். மேலும், இப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த படக்குழுவினர் அசந்துபோய் இருப்பதாக சமூகவலைதளங்களில் ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் பற்றிய ட்வீட்கள் தீயாய்ப் பரவி வந்தன. இந்நிலையில் கோலிவுட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
லியோ ட்ரெய்லர் எப்படி இருந்தது என்பது குறித்த உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!