வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கிவிவ்: உக்ரைனில் மாளிகை வணிகவளாகத்தின் மீதுரஷ்யா நடத்திய ராக்கெட் வீச்சில் 49 பேர் பலியானதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, அதன் அண்டை நாடான ரஷ்யா போர் தொடுத்து உள்ளது. பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் போர் நீடித்து வரும் நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவர நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில் இன்று (05 ம் தேதி) உக்ரைனின் கிழக்கே கார்கிவ் மாகாணம், ஓலெக் சினிகபோ என்ற இடத்தில் மாளிகை சமான்கள் விற்பனை செய்யும் வணிக வளாக கட்டட்தின் மீது ரஷ்யா ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 49 பேர் பலியானதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, சேதமடைந்த கட்டடங்களின் புகைபடத்தை தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement