பெங்களூருவிலிருந்து புனேவுக்குச் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானத்தில், படிப்பை முடித்துவிட்டு 20 வயது மாணவி ஒருவர் புனேவுக்குச் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில், தனக்கு பணியில் இல்லாத விமானி ஒருவர் தொல்லைக் கொடுத்ததாக, அந்த மாணவி விமானப் பணியாளர்களிடம் புகார் அளித்திருக்கிறார்.
மேலும், இது தொடர்பாக அந்த மாணவி தனது சோஷியல் மீடியா பக்கத்தில், “பைலட் அடையாள அட்டை அணிந்திருந்த ஒருவர் விமானத்தில் எனக்கு லக்கேஜ் வைக்க உதவி செய்வதுபோல், என்னுடன் பேச முயன்றார். அதோடு அந்த பைலட் விமான பணிப்பெண் ஒருவர் மூலம் என்னை அவரது இருக்கைக்கு அருகில் வரும்படி அழைத்தார். நான் அங்கு சென்று எதாவது பிரச்னையா என்று கேட்டேன். அவர் அங்கு மது அருந்திக்கொண்டிருந்தார். அதை எனக்குக் கொடுத்து, அருந்துமாறு கூறினார்.

ஆனால், நான் அதனை நிராகரித்துவிட்டு, எனது இருக்கைக்கு வந்துவிட்டேன். அப்படி இருந்தும் அடிக்கடி என்னுடன் பேச முயற்சி செய்து கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் என்னைக் கட்டாயப்படுத்தி அவரது இருக்கைக்கு அருகில் அமரவைத்தார். எனது லக்கேஜ்களையும் மாற்றினார். இது குறித்து விமானப் பணிப்பெண்ணிடம் புகார் செய்தேன். ஆனால், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விமானத்திலிருந்து இறங்கிய பிறகும் தன்னுடன் வந்து தங்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதோடு எனது போன் நம்பரையும் கட்டாயப்படுத்தி வாங்கினார். இது குறித்து ஆகாஷா ஏர்லைன்ஸில் புகார் செய்தேன். ஆனால், எந்தவித பதிலும் இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆகாஷா ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் இது தொடர்பாக, “மனுதாரரை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால், முடியவில்லை. இது தொடர்பாக விசாரித்து வருகிறோம்” என விளக்கமளித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.