வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்பின் ராணுவ மற்றும் நிர்வாகத் திறனை அழிக்கும் வரை போர் தொடரும் என ரஷ்ய அதிபர் புடினுடனான தொலைபேசி உரையாடலின் போது, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதியாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேசி உள்ளார். இது குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: கொடூர கொலைகாரர்களால் இஸ்ரேல் பலத்த சேதங்களை சந்தித்துள்ளது.
இதற்குக் காரணமான ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் ராணுவ மற்றும் நிர்வாக திறனை அழிக்கும் வரை தாக்குதல் தொடர்ந்து நடக்கும். ஹமாஸ் தீவிரவாதிகளை அழித்தொழிக்கும் வரை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா தரப்பு விளக்கம்
அதேபோல், தொலைபேசியில் ரஷ்ய அதிபர் மற்றும் இஸ்ரேல் அதிபர் பேசியதை உறுதிப்படுத்தும் வகையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இஸ்ரேல் – காசா இடையே வன்முறை மேலும் தீவிரம் அடையாமல் இருக்க ரஷ்யா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், இரு தரப்புக்கும் இடையேயான இந்தத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து அதிபர் புடின் விளக்கி கூறினார்.
இஸ்ரேலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை அதிபர் புடின் தெரிவித்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement