அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: இருவர் பலி | Apartment fire: Two killed

மும்பை, மஹாராஷ்டிராவில் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், இருவர் பரிதாபமாக பலியாகினர்.

மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள மஹாவீர் நகரில், ‘பவன்தாம் வீணா சந்துார்’ என்ற குடியிருப்பு கட்டடம்உள்ளது.

எட்டு மாடிகளை உடைய இந்த கட்டடத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

இந்த கட்டடத்தின் முதல் தளத்தில் நேற்று மதியம் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அங்குள்ள மின்சாரம் மற்றும் கேபிள் ஒயர்களில் பரவிய தீ மளமளவென எரிந்ததால், அங்கிருந்த பலர் அலறியடித்தபடி வெளியேறினர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். அங்கு வசித்தவர்களும் உடனடியாக மீட்கப்பட்டனர்.

இந்த விபத்தில் இருவர் பலியாகினர். காயமடைந்த மூன்று பேர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.