நடிகர் விஜய்யின் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ‘லியோ’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியது.
இந்நிலையில் நேற்றைய தினம் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கெளதம் மேனன், மிஷ்கின், நடிகை த்ரிஷா ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
இந்த விழாவில் பேசிய நடிகை த்ரிஷா,” நல்ல வேளை என்னை படத்துல லோகேஷ் கொலை பண்ணல. ஸ்கூல்ல படிச்ச நண்பனை ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ணும் போது எப்படி இருக்குமோ, அப்படி தான் எனக்கு மீண்டும் விஜய்யை சந்திக்கும் போது இருந்தது. என்கிட்டையும் பலர் விஜய்கூட நடிக்குற காம்போ பத்தி மெசேஜ்ல கேட்டுட்டே இருந்தாங்க. லோகேஷோட துணை இயக்குநர்கள் எல்லோரும் ரொம்ப நல்லா வேலை பார்த்தாங்க.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் போதும் விஜய் அப்படியேதான் இருக்காரு. ” என்றவரிடம் தொகுப்பாளர் ,” இந்த படத்துலயாச்சு காரப்பொரி வாங்கி கொடுத்தாரா ? ” என கேட்ட கேள்விக்கு ,” இன்னும் இல்ல, இன்னொரு படம் பண்ணுவோமா …” என பதிலளிக்க அரங்கமே விசில் ஒலிகளால் நிரம்பியது.