ஆல் ஏரியா இந்தியா கில்லிடா… விராட், கில், ஷ்ரேயாஸ் அரைசதம் – இலங்கைக்கு இமாலய இலக்கு!

IND vs SL Match Update: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் 33ஆவது லீக் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணிக்கு ரோஹித் சர்மா – சுப்மான் கில் ஜோடி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.

மதுஷங்கா அட்டாக்

இதில், மதுஷங்கா வீசிய முதல் ஓவரிலேயே இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டெம்புகள் தெறிக்க ரோஹித் வெளியேறினாலும், கில் – விராட் ஜோடி இலங்கை அணிக்கு பெரும் தலைவலியை கொடுத்தது. இந்த ஜோடி சிங்கிள்ஸ், டபுள்ஸ், பவுண்டரிகள் என ரன்களை குவித்துக் கொண்டே இருக்க ஸ்கோரும் எகிறியது. 

சாதனை சதத்தை தவறவிட்ட கோலி

இருவரும் அரைசதம் கடந்து சதம் நோக்கி சென்றுகொண்டிருக்க மீண்டும் மதுஷங்கா ஒரே பிரேக் போட்டார். கில் – விராட் ஜோடி 189 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அப்போது, கில்லை 92 ரன்களில் மதுஷங்கா அவுட்டாகினார். தொடரின் அவரின் அடுத்த ஓவரிலேயே விராட் கோலியும் 88 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சச்சின் 49ஆவது சதத்தை விராட் இன்றும் சமன் செய்யாமல் ஏமாற்றமளித்தார். 

Innings Break!#TeamIndia set afor Sri Lanka!

Over to our bowlers

Scorecardhttps://t.co/rKxnidWn0v#CWC23 | #MenInBlue | #INDvSL pic.twitter.com/80fANgx9wa

— BCCI (@BCCI) November 2, 2023

சிக்ஸர் மழை பொழிந்த ஷ்ரேயாஸ்

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் இலங்கை போட்டியை தன்வசம் இழுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு ஷ்ரேயாஸ் ஐயர் விடவில்லை. அவர் ஆரம்பம் முதலே அடித்து ஆடும் நோக்கத்தில் வந்திருந்தார். அதன்படி, தொடர்ந்து, பவுண்டரிகளை சிக்ஸர்களையும் அடித்தார். இருப்பினும் மறுமுனையில் சமீரா பந்துவீச்சில் கே.எல். ராகுல் 21 ரன்களிலும், மதுஷங்காவிடம் சூர்யகுமார் யாதவ் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜடேஜாவும் கைகொடுக்க ஷ்ரேயாஸ் அரைசதம் கடந்தும் அதிரடியை தொடர்ந்தார்.

முதல்முறையாக 300+

மதுஷங்கா வீசிய 48ஆவது ஓவரின் முதலிரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பிய ஷ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது பந்தில் தீக்ஷனாவிடம் கேட்ச் கொடுத்து நடையைகட்டினார். அவர் 56 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜாவும் கடைசி கட்டத்தில் ரன்களை எடுக்க 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்களை குவித்தது. இலங்கை அணி பந்துவீச்சில் மதுஷங்கா 5 விக்கெட்டுகளையும், துஷ்மந்தா சமீரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த தொடரில் இந்திய அணி முதல்முறையாக 300+ ரன்களை எடுத்தது. இதில் வெற்றிபெற்றால் இந்திய அணி அரையிறுதி செல்வது உறுதியாகிவிடும். இலங்கை அணி அரையிறுதி ரேஸில் இருந்து வெளியேறும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.