புஜ், குஜராத் நாளை தொடங்க உள்ள ஆர் எஸ் எஸ் செயற்குழு கூட்டத்தில் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. குஜராத் மாநிலம் புஜ் நகரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வருடாந்திர அகில இந்தியச் செயற்குழு கூட்டம் நாளை முதல் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 381 பொறுப்பாளர்கள் இந்த செயற்குழுவில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் சுனில் அம்பேத்கர் செய்தியாளர்களிடம்: ”இக்கூட்டத்தில், சங்க […]
