இராணுவ போர் கருவி படையணியின் புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் இஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சி எல்எஸ்சி எஎடிஓ அவர்கள் ஒக்டோபர் 30 தொம்பேகொட இராணுவ போர் கருவி படையணி தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அன்றைய நிகழ்வில் இராணுவ போர் கருவி படையணியின் நிலைய தளபதி கேணல் கேஎம்எடபிள்யூகே பெரேரா எஎடிஓ, பிரிகேடியர் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சி எல்எஸ்சி எஎடிஓ ஆகியோர் பிரதான நுழைவாயிலில் புதிய படைத் தளபதிக்கு வரவேற்பளித்தனர்.
இராணுவ போர் கருவி படையணியின் படையினர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, தலைமையகத்தில் உயிரிழந்த போர் வீரர்களின் நினைவுத் தூபியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மரக்கன்று ஒன்றையும் அவர் நாட்டினார்.
மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிய படைத்தளபதி படையணியின் படையினர் முன்னிலையில் கடமைகள் மற்றும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் முறையான ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தை தொடர்ந்து, புதிய படைத் தளபதி, படையினருக்கு ஆற்றிய உரையின் போது, கூட்டு முயற்சிகள், ஒற்றுமை மற்றும் ஒழுக்கமான மற்றும் தகுதியான பணியின் வளர்ச்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்து காட்டினார்.