Vida electric dirt bike – ஹீரோ விடா எலக்ட்ரிக் டர்ட் பைக் கான்செப்ட் அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் பிராண்டில் ஆஃப் ரோடு டர்ட் அட்வென்ச்சர் பிரிவில் சிறுவர்களுக்கு ஏற்ற விடா ஏக்ரோ கான்செப்ட் மற்றும் விடா லினக்ஸ் கான்செப்ட் ஆகியற்றுடன்  வி1 புரோ ஸ்கூட்டர் சர்வதேச அளவில் EICMA 2023 அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, ஃபிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் என மூன்று நாடுகளில் முதற்கட்டமாக வி1 புரோ ஸ்கூட்டர் இந்திய சந்தையில் உள்ளதை போன்றே ஸ்வாப் செய்யும் வகையில் 2 பேட்டரி கொண்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹீரோ 2024 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனையை துவங்கும். மேலும் பிரீமியம் பெட்ரோல் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளது.

Vida Acro Concept

3 முதல் 9 வயது சிறுவர்களுக்கு ஏற்ற விடா ஏக்ரோ எலக்ட்ரிக் கான்செப்ட் டர்ட் மாடலில் மிக சிறப்பான ஆஃப் ரோடு அனுபவத்தை பெறும் வகையில் இலகு எடை கொண்டதாக சிறுவரகள் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பு அம்சத்தை கொண்டிருக்கலாம்.

தனித்தன்மை கொண்டதாக உள்ள மூன்று-புள்ளி அட்ஜெஸ்டபிள் ஃபிரேம் ஆனது எந்தவொரு சிறப்புக் கருவிகளும் தேவையில்லாமல் இரண்டு நிமிடங்களுக்குள் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான அமைப்பை மாற்றியமைக்க அனுமதிக்கும் என்று ஹீரோ குறிப்பிட்டுள்ளது.

vida acro concept e dirt bike

Vida Lynx concept

15kW (20.4hp) பவரை வழங்குகின்ற லினக்ஸ் கான்செப்ட்டின் மொத்தம் 82 கிலோ எடை கொண்ட லின்க்ஸ் இ-டர்ட்பைக் ஹீரோ காட்சிப்படுத்தியது. இந்த மாடலில் 3kWh பேட்டரி கொண்டு தோராயமாக ஒரு மணிநேரத்திற்கு முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

இந்த மாடலில் யூஎஸ்டி ஃபோர்க், பாக்ஸ்-செக்ஷன் அலுமினியம் ஸ்விங்கார்ம், பெட்டல் ரோட்டர் மற்றும் ஆஃப் ரோடு டயர்களுடன் கூடிய 21/18-இன்ச் ஸ்போக் வீல் பெற்றுள்ளது..

vida lynx

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.