திமாபூர், நாகாலாந்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தீ விபத்தில், மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் நாஹார்பாரி பகுதியில் வசிக்கும் மக்கள், தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் பட்டாசு வெடித்தபோது, எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தில், மற்ற வீடுகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால், அப்பகுதி முழுதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், இரண்டு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.
எனினும், இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தால், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தார் பாதிக்கப்பட்டனர்.
அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement