சென்னை சென்னை நகரில் குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம் புகார்களைத் தெரிவிக்கக் கட்டுப்பாடு அறை அமைத்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. வானிலை ஆய்வு மையம் நாளையும் சென்னையில் மழை தொடரும் என்று தெரிவித்துள்ளது. இன்று சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை குடிநீர் […]
