வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காத்மாண்டு : நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை கொண்டு வரக்கோரி போராட்டம் துவங்கியுள்ளது.
நேபாளத்தில், 2007ல், மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, 2008ல் குடியரசு உருவானது. ஜனநாயக நடைமுறை படி நடந்த தேர்தல் நடந்தாலும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுவதும், பிரதமர்கள் பதவி விலகுவதும் , ராஜினாமா செய்வதும் என அரசியல் குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் நேபாளில் அந்நாட்டின் பிரபல தொழிலதிபர் துர்க குமார் பராசி தலைமையிலான அமைப்பு மீண்டும் மன்னராட்சி கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இவரது ஆதரவாளர்கள் இன்று பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement