Ameer: “அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது…" – சுதா கொங்கராவின் பதிவு

இயக்குநர் அமீர் – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்குமான பிரச்னைதான் தற்போது கோடம்பாக்கத்தின் பேசுபொருளாகியிருக்கிறது.

அமீர்

பருத்திவீரன் படம் தனக்கு எந்த வித மகிழ்ச்சியையும் தரவில்லை என அமீர் பலமுறை தெரிவித்திருக்கிறார். படம் தொடர்பாக இயக்குநர் அமீர் வழக்கு ஒன்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் கார்த்தியின் 25 வது படத்தையொட்டி ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் அமீர் கலந்துகொள்ளாதது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அமீர் பதிலளித்திருந்தார். இயக்குநர் அமீர் பருத்திவீரன் படம் குறித்தும், அந்த விழாவில் தான் பங்கேற்காததன் காரணம் குறித்தும் அந்த பதிலில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அமீர் பேசியதற்கு பதிலளிக்கும் விதமாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதிலளித்திருந்தார்.

அவர் தெரிவித்த கருத்து குறித்து தன் தரப்பு விளக்கத்தைத் தெரிவித்த இயக்குநர் அமீர் இனி இந்தப் பிரச்னை குறிப்பது பேசப் போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார். அமீருக்கு ஆதரவாக இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன் மூவரும் தங்களின் கருத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இயக்குநர் அமீரின் பதிவு – Ameer: “அது பலருடைய வாழ்க்கையில் புயலைக் கிளப்பி விடும்”- ஞானவேல் ராஜாவுக்கு அமீர் பதில்

சசிகுமாரின் பதிவு – Ameer:”அமீர் அண்ணன் சொல்வது உண்மைதான்”- ஆதரவு தெரிவித்த சசிகுமார்

சமுத்திரக்கனியின் பதிவு – Ameer: `கார்த்தி அமைதியா இருக்கிறத என்னால ஏத்துக்க முடியல’- அமீருக்கு ஆதரவு தெரிவித்த சமுத்திரக்கனி

கரு.பழனியப்பனின் பதிவு – Ameer:“சசிக்குமார், சமுத்திரக்கனி இருவரும் தொடக்கமே” – கரு.பழனியப்பன்

ஞானவேல் ராஜா

இதற்கிடையே ஞானவேல் ராஜாவின் நேர்காணல் ஒன்றில் ராம் திரைப்படம் குறித்து அவர் பேசிய தொகுப்பு ஒன்று சமூக வவைதளங்களில் வைரலானது. அதில் தற்போது இயக்குநராக உள்ள சுதா கொங்கரா மற்றும் நடிகர் கார்த்தி இருவருடன் சேர்த்து ராம் திரைப்படம் பார்க்கச் சென்றதாகவும், சுதா கொங்கரா ராம் படத்தின் மேக்கிங் சரியில்லை எனத் தெரிவித்ததாகவும் ஞானவேல் ராஜா குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக சுதா கொங்கரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், ” பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது… நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்… எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அவரும் ஒருவர்… நான் ஒரே ஒரு விஷயம்தான் அவரிடம் சொன்னேன்…

என் படத்தில் வந்த மதியின் கதாப்பாத்திரம் முத்தழகின் பாதிப்புதான் என்று. ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன். நான் என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாரு தான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில் தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை… இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம்.. நன்றி…” எனக் குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.