மட்டக்களப்பில் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்பு மாநாடு!!

பாடசாலை மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி பிள்ளை நேய சூழலை உருவாக்கும் விதத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மாணவர் தூதுவர் நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக பாடசாலையின் சிரேஸ்ட மாணவ தலைவர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்களை உள்ளடங்கிய சிறுவர் பாதுகாப்பு மாநாடு (13) மாவட்ட செயலகத்தின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சகல கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய மாணவ தூதுவர் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் சிரேஸ்ட மாணவர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் பங்குபற்றினர்.

இந்நிகழ்வானவது மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி நிகரா றியாஸ் மற்றும் மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் சு.பிரபாகர் ஆகியோரின் இணைப்பாக்கத்தின் கீழ் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்விற்கு வளவாளர்களாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் மற்றும் வைத்திய கலாநிதி டான் செளந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாவட்ட உளவளத்துனை உத்தியோகத்தர் திருமதி பு.சுபாநந்தினி மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட னர்.

கட்டிளமை பருவத்தினரின் விருத்தி மற்றும் சுகாதாரம் தொடர்பாகவும், மாவட்டத்தில் சிறுவர்கள் எதிர் நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டு, அதற்குறிய தீர்வுக்கான வழிமுறைகளும் கண்டறியப்பட்டதுடன் அவ் விடயங்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமை காரியாலயத்திதிற்கு ஆற்றுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.