மின்சார நிலையங்களை அண்டிய பிரதேசங்களில் போதிய மழை வீழ்ச்சி காணப்படுவதனால் ஏதேனும் நன்மை காணப்படுவதாகவும் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மின்சாரப் பட்டியலைத் திருத்தக்கூடியதாக இருக்கும், என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடு நீண்ட காலமாக முரையான வரிக் கொள்கையைப் பின்பற்றாமை மற்றும் பல்வேறு உதவிகளின் கீழ் செயற்படுவதனால் இவ்வாறான பொருளாதாரச் சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டதாகவும் 17ஆவது தடவையும் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல வேண்டியேற்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக, வரிச் சுமையை உயத்வதற்கு அரசாங்கம் விரும்பவில்லை. ஆனால் கடந்த 10 வருடமாக புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவில்லை. மின் கட்டணம் அதிகம் என்று சொல்வதற்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் நிலையங்கள் அமைக்கப்படவில்லை. கடந்த ஒன்றரை வருடங்களில் அரசாங்கம் என்ற ரீதியில் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டி ஏற்பட்டது. மீளப்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பெற்றுக்கொள்வதற்காக அர்ப்பணித்தவர்களுக்கு இன்று நாம் கதை கூறி அடிக்கிறோம்.
மின் முதலீடாக நாட்டிற்குக் கொண்டு வருவதற்கே நாம் கடந்த வருடத்தைக் கழித்தோம். ஆனால் மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி எவ்வித முதலீடும் நாட்டிற்கு வருவதில்லை. இன்று நாடு உறுதியாக மீளத் திரும்பியுள்ளதை எமக்குக் காணக் கிடைக்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்டத்தை வழங்கும் தீர்மானத்தை எடுத்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ள 337 மில்லியன் அமெரிக்க டொலர்களை இரண்டாம் கட்ட கடனுதவிக்கான அனுமதி கிடைத்துள்ளது. அந்நிதியுதவி இலங்கையுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள 48 மாதகால நீளமான நிதியுதவியின் முதலாவது மதிப்பீடு (12) திகதிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. அந்த ஐந்து மணித்தியால நட்டத்திற்கு பொறுப்புக் கூறுமாறு பொதுமக்கள் பயன்பாடுகளுக்கான ஆணைக்குழு முன்னால் தலைவரைக் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அதற்கு முந்திய நாள் சில மணி நேரங்க மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கான காரணமான மின் உற்பத்தி நிலையத்தை அமைக்காது விடுதல் மற்றும் மீளப்புதுப்பிக்கத்தக்க சக்தி வலுவை உற்பத்தி செய்வதற்காக முன்வராமை குறித்துக் கதைப்பதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.