
ஓ மை கடவுளே பட இயக்குனர் உடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்
கடந்த 2020ல் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஓ மை கடவுளே'. இதன் வெற்றிக்குப் பிறகு இன்னும் அஸ்வந்த் மாரிமுத்து தமிழில் தனது அடுத்த படத்தை அறிவிக்கவில்லை. இதற்கிடையில் இவர் நடிகர் சிலம்பரசனை வைத்து படம் இயக்குவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் அஸ்வந்த் மாரிமுத்து தனது அடுத்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஹீரோவாக நடிக்க பிரதீப் ரங்கநாதனுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். கோமாளி மற்றும் லவ்டுடே படங்களை இயக்கிய பிரதீப், லவ்டுடே படத்தில் நாயகனாகவும் அறிமுகமானார். இப்போது விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கார்பரேசன் படத்தில் நடிக்கிறார். அதன்பின் இவரின் படத்தில் இணையலாம்.