இந்தியப் பாடல் போட்டியில் மகுடம் சூடிய இலங்கையைச் சேர்ந்த கில்மிஷா உதயசீலனுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் “Zee Tamil” தொலைக்காட்சி அலைவரிசை நடத்திய சரி கம பா “little champs 2023” போட்டியில் மகுடம் சூடிய இலங்கையின் கில்மிஷா உதயசீலனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

14 வயதுடைய கில்மிஷா உதயசீலன் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன், இலங்கைப் பெண் ஒருவர் இந்திய தொலைக்காட்சி பாடல் போட்டியில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.

கில்மிஷா உதயசீலன் நாட்டிற்கு புகழ் சேர்த்தமைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளதுடன், சிறுமியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எதிர்காலக் கல்வி மற்றும் இசை வாழ்வில் வெற்றிபெற தனது ஆசிகளையும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.