India National Cricket Team: தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய சீனியர் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி (IND vs SA) வருகிறது. இதில் டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமன் செய்தது. சூர்யகுமார் தலைமையில் இந்தியா டி20 தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி மழையால் முழுமையாக ரத்தாக, இரண்டாவது போட்டியை தென்னாப்பிரிக்காவும், மூன்றாவது போட்டியை இந்தியாவும் வென்றன.
இந்தியா ஆதிக்கம்
தொடர்ந்து ஒருநாள் தொடரில் இந்திய அணி (Team India) முதல் போட்டியிலேயே ஆதிக்கத்தை செலுத்தி வெற்றியையும் பதிவு செய்தது. கே.எல். ராகுல் (KL Rahu) தலைமையிலான இளம் அணி சிறப்பாக செயல்பட்டாலும் இரண்டாவது போட்டியில் தடுமாறி தென்னாப்பிரிக்காவிடம் சரணடைந்தது. அந்த வகையில் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
பேட்டிங்கில் இந்திய அணி 296 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 108, திலக் வர்மா 52 ரன்களையும் அடித்தனர். தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்கள் ஹெண்ட்ரிக்ஸ் 3 விக்கெட்டுகளையும், பர்கர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 45.5 ஓவரிலேயே 218 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. சோர்ஸி 81, மார்க்ரம் 36 ரன்களை அடித்தனர். அர்ஷ்தீப் 4, வாஷிங்டன் மற்றும் ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக சஞ்சு சாம்சனும், தொடர் நாயகனாக அர்ஷ்தீப் சிங்கும் தேர்வானார்கள்.
சுவாரஸ்ய சம்பவங்கள்
நேற்று சுவாரஸ்யமான சில நிகழ்வுகள் போட்டியில் நடந்தது. அதில் தென்னாப்பிரிக்காவின் பேட்டிங்கின்போது, 8ஆவது வீரராக சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் பேட்டிங் செய்ய வந்தார். அவர் பேட்டிங் செய்ய வந்ததும் என்ற ஆதிபுரூஷ் திரைப்படத்தின் ‘ராம் சியா ராம்’ பாடல் மைதானத்தில் ஒலிக்கப்பட்டது. அப்போது அவர் ஸ்டம்புக்கு பின்புறம் கீப்பிங் நின்ற கேஎல் ராகுல், “நீங்கள் பேட்டிங் செய்ய வரும்போதெல்லாம் இந்த பாடல் படிக்கிறது” என கூற, அதற்கு கேசவ் மகாராஜ்,”ஆமாம்” என்றார். கேசவின் பதிலை அடுத்து ராகுல் சற்று புன்முறுவலுடன் காணப்பட்டார். இதன் வீடியோ X தளத்தில் வைரலானது.
Super Giants bante >>>>>pic.twitter.com/k0DxIrRqLN
— Lucknow Super Giants (@LucknowIPL) December 21, 2023
தொடர்ந்து, 35.5 ஓவரில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீசும்போது, கேப்டன் கேஎல் ராகுல்,”மெதுவா போடு மச்சி” என தமிழில் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. தொடர்ந்து, ஸ்லிப்பில் இருந்த சாய் சுதர்சனும் வாஷிங்டன் சுந்தரிடம் “மெல்லமா போடு…” என கூறியதும் பதிவாகியிருந்தது. இதில் சாய் சுதரச்ன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தமிழர்கள் என்றாலும் கன்னடரான ராகுல் தமிழில் பேசியது நேற்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
Over 35.5 Kl Rahul to Washy
“medhuva podu machi”
#INDvSA #INDvsSA #KLRahul
— $hyju (@linktoshyju) December 21, 2023