மும்பையில் உள்ள ரத்னகிரியில் தாவூத் சிறு வயதில் வாழ்ந்த சொத்துகள் ஏலம்

மும்பை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சிறு வயதில் வாழ்ந்த ரத்னகிரியில் உள்ள வீடு உட்பட நான்கு சொத்துகள் நேற்று ஏலத்தில் விடப்பட்டன.

1993-ல் நடத்தப்பட்ட மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தாவூத் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அதன்பின் இவர் இந்தியாவை விட்டு தப்பியோடி தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில், மும்பை ரத்னகிரியில் அவர் சிறுவயதில் வாழ்ந்த வீடு உட்பட தாவூத் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான நான்கு சொத்துகள் நேற்று ஏலத்தில் விடப்பட்டன. மொத்தம் உள்ள இந்த நான்கு சொத்துகளில் இரண்டு சொத்துகள் முறையே ரூ.2.01 கோடி மற்றும் ரூ.3.28 லட்சத்துக்கு ஏலம் போனது. 170.98 சதுர மீட்டர் அளவுள்ள விவசாய நிலம் அதிகபட்சமாக ரூ.2.01 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

அதேபோன்று, 1,730 சதுர மீட்டர் அளவுள்ள மற்றொரு விவசாய நிலம் ரூ.3.28 லட்சத்துக்கு ஏலத்தில் விடப்பட்டது. தெற்கு மும்பையில் உள்ள ஆயகர் பவனில் நேற்று இந்தஏலம் நடத்தப்பட்டது. கடத்தல்காரர்கள் மற்றும் அந்நியச் செலாவணி மோசடியாளர்கள் (சொத்து பறிமுதல்) சட்டத்தின் (எஸ்ஏஎப்இஎம்ஏ) கீழ் உரிய அதிகாரிகளின் முன்னிலையில் இந்த ஏலநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2017 மற்றும் 2020-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் எஸ்ஏஎப்இஎம்ஏ சட்டத்தின் கீழ்தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்புடைய 17-க்கும் மேற்பட்ட சொத்துகள் ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.