மும்பை: காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த முரளி தியோரா மகன் மிலிந்த் தியோரா கட்சியில் இருந்து விலகி உள்ளார். லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரசுக்கு இது பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.
மஹாராஷ்ட்டிராவை சேர்ந்த மறைந்த முரளி தியோரா காங்கிரஸ் ஆட்சியில் 2006 முதல் 2011 வரை பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்தவர். அவருக்கு அடுத்து பல்வேறு பொறுப்புகளை அவரது மகன் மிலிந்த் தியோராவுக்கு கொடுத்து அழகு பார்த்தது காங்கிரஸ். 2011 முதல் 2014 வரை தகவல் தொழில்நுட்பம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். சமீப காலமாக கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.
55 ஆண்டு கால கட்சி உறவு முடிவுக்கு வருவதாக அவர் கூறியுள்ளளார். இவர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து அவரது கட்சியில் சேர்வார் என கூறப்படுகிறது. மிலிந்த் தியோரா ராகுலுடன் மிக நெருக்கமான நட்புறவை பேணி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி மஹாராஷ்ட்டிராவில் நீண்ட கடல் பாலத்தை திறந்து வைத்தார். இவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த சில நாட்களில் மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement