Jawa 350 – ₹ 2.15 லட்சத்தில் புதிய ஜாவா 350 பைக் விற்பனைக்கு வெளியானது

மஹிந்திரா கிளாசிக் லெஜென்ட்ஸ் கீழ் செயல்படும் ஜாவா மோட்டார்சைக்கிள் புதிய ஜாவா 350 பைக் மாடலை விற்பனைக்கு முன்று விதமான நிறங்களில் ரூ.2,14,950 விலையில் வெளியிட்டுள்ளது.

தோற்ற அமைப்பில் விற்பனையில் உள்ள ஜாவா மாடலை போலவே அமைந்திருந்தாலும் என்ஜின் ஆனது பெராக் மற்றும் 42 பாபர் பைக்குளில் உள்ள 334சிசி என்ஜின் பெற்றிருந்தாலும் பவர் ஆனது குறைக்கப்பட்டுள்ளது.

2024 Jawa 350

புதிய 2024 ஆம் ஆண்டிற்கான ஜவா 350 பைக் மாடலில் ஆரஞ்ச், கருப்பு மற்றும் மெரூன் என மூன்று விதமான நிறங்களை பெற்றுள்ளது.  334cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 22.5 hp பவர் மற்றும் 28.1 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய மாடலை விட முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட சேஸ் மற்றும் வடிவமைப்பினை பெறுவதனால் கிரவுண்ட் கிளியரன்ஸ் 178 மிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருக்கை உயரம் 802 மிமீ மற்றும் வீல்பேஸ் 1,449 மிமீ நீளமாக உள்ளது. முந்தைய மாடல் 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 765 மிமீ இருக்கை உயரம் மற்றும் வீல்பேஸ் 1,368 மிமீ ஆகும்.

மேலும், பைக்கின் கர்ப் எடை 182 கிலோவிலிருந்து 194 கிலோவாக உயர்ந்துள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் ஒரு புதிய இரட்டை தொட்டில் சேஸ் ஆனது மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் நிலைப்புதன்மை மேம்படுத்த முன்புறத்தில் 100/90 -18 அங்குல ஸ்போக் வீல் மற்றும் பின்புறத்தில் 130/80-17 அங்குல டயர் உள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சர்பர் பெற்று இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்குடன்  விலை முந்தைய மாடலை விட ரூ.12,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

2024 Jawa 350 price ₹ 2,14,950

(ex-showroom Delhi)

jawa 350 colours

 

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.