Kerala student stabs assistant professor | உதவி பேராசிரியரை கத்தியால் குத்திய கேரள மாணவர்

கொச்சி,கேரள மாநிலம் கொச்சியில் மஹாராஜா அரசு கல்லுாரி உள்ளது. இதில் அரபி ஆராய்ச்சித்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் நிஜாமுதீன்.

இந்நிலையில் அந்த துறையைச் சேர்ந்த மாணவர் ஒருவரை, கல்லுாரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.

இது குறித்து அந்த மாணவனுடன் படிக்கும் சக மாணவரான முகமது ரஷீத், உதவி பேராசிரியர் நிஜாமுதீனுடன் நேற்று முன்தினம் வகுப்பறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஆத்திரமடைந்த ரஷீத், திடீரென தான் வைத்திருந்த கத்தியால் பேராசிரியர் நிஜாமுதீனின் முதுகில் குத்தினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடிய மாணவரை தேடி வருகின்றனர். பேராசிரியர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.