சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படம் பொங்கலையொட்டி கடந்த 12ம் தேதி வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. சிறப்பான வசூலையும் பெற்று வருகிறது. கடந்த ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படமும் மிகப்பெரிய வரவேற்பை சிவகார்த்திகேயனுக்க பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் சிவகார்த்திகேயன் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.
