சென்னை: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நேற்றைய தினம் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சர்வதேச அளவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். இந்திய அளவில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், சச்சின் டெண்டுல்கர், விராத் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.
