லாபம் கொடுக்கும் எருமை வளர்ப்பு; பால் மதிப்புக்கூட்டல்… பசுமை விகடன் வழங்கும் நேரடி பயிற்சி!

பால் என்றாலே கறவை மாடு வளர்ப்புதான் பலருக்கும் நினைவு வரும். ஆனால், கறவை மாடு வளர்ப்பில் தீவனச் செலவு, நோய்தாக்கம் போன்ற காரணங்களால் கறவை மாடு வளர்ப்பை தேர்ந்தெடுப்பதற்கு விவசாயிகள் தயங்குகிறார்கள். அந்த வகையில் மாற்று தேர்வாக இருந்து வருகிறது எருமை வளர்ப்பு. அதிக கொழுப்புச் சத்து, பாலுக்கு அதிக விலை, சீதோஷ்ண நிலையை தாங்கும் உள் நாட்டு எருமை இனங்கள், குறைவான பராமரிப்பு என்று எருமை வளர்ப்பை தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய காரணங்களாக இருந்து வருகிறது.  

எருமை

இந்த எருமை வளர்ப்பை மேற்கொள்வதற்கான வழிகாட்டும் நிகழ்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த அலமாதி/கொடுவள்ளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்ப கல்லூரியில் நேரடி பயிற்சி நடைபெற உள்ளது. பசுமை விகடன், உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்ப கல்லூரி சார்பில் வருகிற ஜனவரி 31-ம் தேதி (31-01-24) நடைபெற உள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அனுபவ விஞ்ஞானிகள் இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு வழிகாட்ட உள்ளார்கள்.

இந்த பயிற்சியில் கலந்து கொண்டால் என்னவெல்லாம் கற்றுக் கொள்ளலாம், எவ்வாறு இது எருமை வளர்ப்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று இக்கல்லூரியின் முதல்வர் குமாரவேலுவிடம் கேட்டபோது,

 “எருமை மாட்டில் பொதுவாக calf Mortality என்று சொல்லப்படும் கன்று இறப்பு அதிகமாக இருக்கும். அதை அறிவியல் ரீதியாக அணுகுவது மிக அவசியம். இந்த பயிற்சி முகாம் இரு பாகமாக நடைபெறும். அதில் ஒரு பாகமாக எருமை பண்ணையை அமைப்பது, எவ்வாறு எருமை மாடுகளைத் தேர்ந்தெடுப்பது, அறிவியல் ரீதியில் ஊட்டச்சத்தை எவ்வாறு அதிகரிப்பது மற்றும் நோய்த் தடுப்பு ஆகியவற்றைப் பற்றி அதில் உள்ள வல்லுநர்கள் பயிற்சி அளிப்பார்கள். மற்றொரு பாகத்தில் எருமைப் பாலை வைத்து மதிப்புக்கூட்டல் பொருள்கள் தயாரித்தல் பற்றி நேரடி பயிற்சிகள் தரப்படும். இந்த பயிற்சியில் எருமை பாலை வைத்து பனீர், நெய் போன்ற மதிப்பு கூட்டல் பொருட்கள் எவ்வாறு தயாரிப்பது, அதை விற்பனை செய்வது போன்றவற்றுக்கு வழிகாட்டப்படும். நிகழ்வின் முக்கிய அம்சமாக எங்கள் கல்லூரியில் உள்ள எருமை பண்ணையை நேரடியாகச் சென்று பார்த்து பண்ணை பராமரிப்பு பற்றிய பயிற்சியும் அளிக்கப்படும்” என்றார்.

லாபம் எடுக்கும் எருமை வளர்ப்பு பயிற்சி

நாள்: 31-1-24 (புதன்கிழமை).
நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம்: உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி,
அலமாதி/கொடுவள்ளி (சென்னையில் இருந்து 27 கி.மீ), திருவள்ளூர் மாவட்டம்.

நிகழ்வின் சிறப்பம்சங்கள்
* எருமை வளர்ப்பை தொடங்கும் வழிமுறைகள்.
* எருமைப் பாலில் உள்ள நன்மைகளும் அதற்கான விற்பனை வாய்ப்புகளும்
* ஒப்பீட்டளவில் பசுமாட்டுப் பாலைவிட எருமைப் பாலில் கொழுப்புச் சத்து அதிகம். அதற்கான காரணங்கள் என்ன?
* கன்றுகள் இறப்பால்தான் எருமை வளர்ப்பை தேர்ந்தெடுக்க தயங்குகிறார்கள், கன்றுகள் இறப்பை தடுப்பதற்கான வழிகள்.
* லாபகரமான பண்ணை வளர்ப்புகேற்ற எருமை இனங்கள்.
* எருமைப் பண்ணை பார்வையிடுதல்.

யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்

விவசாயிகள், சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளோர், தொழில்முனைவோர், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ளோர், பால் சம்பந்தமான மதிப்புக்கூட்டல் பொருள்கள் தயாரிப்போர், எருமை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

லாபம் எடுக்கும் எருமை வளர்ப்பு பயிற்சி

பயிற்சி கட்டணம் ரூ.999/-
முன்பதிவு அவசியம்.
(மதிய உணவு, தேநீர், சான்றிதழ் வழங்கப்படும்.)

முன்பதிவுக்கு  99400 22128 என்ற எண்ணுக்கு பெயர், ஊர், மாவட்டம், செல்போன் எண்ணுடன் வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளவும்.

மேலும் விவரங்களுக்கு: 99400 22128, 99400 72144.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.