பாடசாலை பாதணிகளுக்கான வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் பாடசாலைக் பாதணிகளுக்கான வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் 01.02.2024 ஆக காணப்பட்டது. அந்தக் காலம் 17.02.2024 வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு பாதணி வழங்குநர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவித்துள்ளது.