வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சட்டவிரோத நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு, நில அபகரிப்பு வழக்குகளில் 9-வது முறையாக சம்மன் அனுப்பியதையடுத்து டில்லியில் அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த சென்றனர். அவர் இல்லை தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன், 48, உள்ளார். இம்மாநிலத்தில் சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் அத்துடன், போலி ஆவணங்கள் வாயிலாக அபகரிக்கப்பட்ட நிலங்கள் முதல்வர் ஹேமந்த் சோரன் பெயரில் பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நடந்த சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து 9 முறை சம்மன் அனுப்பிது.
இந்நிலையில் 7-வது முறையாக அனுப்பிய சம்மனுக்கு பணிந்து கடந்த 20-ம் தேதி வீட்டிலேயே விசாரணை நடத்துமாறு கூறியதையடுத்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
மீண்டும் 8-வது முறையாக சம்மன் அனுப்பியது. இந்த சம்மனுக்கு ஹேமந்த் சோரன் பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில் விசாரணை முழுமையாக முடியவில்லை என்று கூறி ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத்துறை 9-வது முறையும் சம்மன் அனுப்பப்பட்டது. அதில் ஜன.27-ம் தேதி முதல் 31-ம் தேதிக்குள் ஏதேனும் ஒருநாள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கடிதம் அனுப்பியது. இக்கடிதத்துக்கு ஹேமந்த் சோரன் தரப்பில் எந்தவித அதிகாரபூர்வ பதிலும் அனுப்பப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (ஜன. 29) டில்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த சென்றனர். வீட்டில் ஹேமந்த் சோரன் இல்லை அவர் பற்றிய தகவல் அங்கிருந்தவர்களுக்கும் தெரியவில்லை. இதனால் ஹேமந்த் சோரன் எங்கு சென்றார் என்பது பற்றிய தகவல் தெரியாமல் அவரை தேடும் முயற்சியில் அமலாக்கத்துறை இறங்கியுள்ளது. எப்படியாயினும் அவர் 31-ம் தேதிக்குள் அஜராக வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement