ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (09) ஆரம்பமாகவுள்ளது.
மூன்று சுற்றுக்களைக் கொண்ட இந்த ஒரு நாள் போட்டியின் முதலாவது போட்டி, கண்டி – பல்லேகல விளையாட்டு மைதானத்தில் பி;.ப 2.30 க்கு இரவு, பகல் போட்டிகளாக ஆரம்பிக்கப்பட உள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் தலைவர், சகல துறை ஆட்டக்காரர், தசுன் ஷானக இந்த ஒரு நாள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவருக்குப் பதிலாக சாமிக கருணாரத்ன அணியில் களமிறங்கவுள்ளார். அத்துடன், இறுதியாக இடம்பெற்ற சிம்பாப்வே அணிக்கு இடையிலான ஒரு நாள் போட்டியில் பங்கேற்றிய நுவனிது பெர்னாண்டோ மற்றும் ஜெப்ரி வெண்டர்ஸோ ஆகிய இரு வீரர்களும் இப்போட்டிக்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையில் இதுவரையில், 12 ஒரு நாள் போட்டிகள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில்; இலங்கை அணி 7 போட்டிகளிலும், ஆப்கனிஸ்தான் அணி 4 போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளன. முற்றுமொரு போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தது..
இலங்கை ஒருநாள் அணி: குசல் மெண்டிஸ் (அணித்தலைவர்;), சரித் அசங்க (துணை தலைவர்;), அவிஷ்க பெர்னாண்டோ, பெதும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, மஹிஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க, பிரமோத்; மதுஷான், ஸஹன் ஆரச்சிகே, அகில தனஞ்சய , துனித் வெள்ளாலகே, சாமிக்க கருணாரத்ன, ஷெவோன் டேனியல்.
ஆப்கானிஸ்தான் ஒருநாள் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிட் (அணித்தலைவர்), ரஹ்மத் ஷா, ரஹ்மானுல்லா குர்பாஸ், இக்ராம் அலிகிஹில், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், அஸ்மத்துல்லா ஒமராசி, முகமது நபி, குல்படின் நைப், குவயிஸ் அஹமட், நூர் அஹமத், முஜிபுர் ரஹ்மான், பஸல்லாஹக் பாரூக், நவீட் சந்ரான், பரீட் அஹமட்.