மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆழ்ந்த சிக்கலில் உள்ள குடும்பங்களுக்கான பால்மா பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (9) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன் மற்றும் கணக்காளர் டிலானி ரேவதன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இப் பால்மா பொதி 233 ஆம் இலக்க இராணுவ படையின் அனுசரணையுடன் ஏழு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த ஆழ்ந்த சிக்கலில் உள்ள 272 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கைத் தரைப்படை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.