
காதலர் தினத்தில் வெளியாகும் ‛ஏழு கடல் ஏழு மலை' முதல் பாடல்
நீண்ட வருடங்களுக்கு பிறகு ராம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஏழு கடல் ஏழு மலை'. இதில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து சில வருடங்கள் ஆகியும் திரைப்பட விழாக்களில் பங்கேற்பதால் இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் 'மறுபடியும் நீ' என்கிற முதல் பாடல் வருகின்ற பிப்ரவரி 14ம் தேதி மாலை 6 மணியளவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.