கண்டி நகருக்கு சுற்றுலாவொன்றை மேற்கொண்டுள்ள இலங்கையின் எகிப்து நாட்டிற்கான தூதுவர் மெஜித் மோஸ்லேஹ் மற்றும் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே இடையேயான சந்திப்பு ஆளுநரின் அலுவலகத்தில் (12) இடம்பெற்றது
இதன்போது இலங்கை மற்றும் எகிப்து நாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் சமய உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
தூதுவரின் கண்டி மாநகருக்கான சுற்றுலாவை நினைவு படுத்தும் விதமாக நினைவுப் பரிசில்கள் பரிமாறப்பட்டதுடன், இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுனரின் செயலாளர் மஞ்சுளா மடகபொல வும் கலந்துகொண்டார்.