சீரியலை விட்டு விலகுகிறாரா வெற்றி வசந்த்?

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்து வரும் சிறகடிக்க ஆசை தொடரில் கதாநாயகன் முத்து கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார் நடிகர் வெற்றி வசந்த். 300 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது வெற்றி வசந்துக்கு திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகிறது. இதனையடுத்து அண்மையில் லைவ்வில் வந்த அவரிடம் சினிமா வாய்ப்பு கிடைத்தால் சிறகடிக்க ஆசை சீரியலிலிருந்து விலகி விடுவீர்களா என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த வெற்றி வசந்த், 'இந்த சீரியல் தான் எனக்கு மறு வாழ்க்கையை தந்தது. தற்போது வெப் சீரிஸ், திரைப்படங்கள் நடிக்கிறேன் என்றாலும் சிறகடிக்க ஆசை சீரியல் தான் எனது மெயின் வேலை. இந்த சீரியலுக்கு சுபம் என்ற ஒரு வார்த்தை போடும் வரை நான் தான் தொடர்ந்து கதாநாயகனாக நடிப்பேன்' என்று கூறியுள்ளார். இதனையடுத்து வெற்றி வசந்த் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.