அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் கம்பஹா மாவட்டத்தில் தேசிய மற்றும் சிறுவர் வைத்தியசாலை

கம்பஹா மாவட்டத்தில் ஏற்படும் சனத்தொகை அதிகரிப்பு மற்றும் தொழில் மயமாக்களுடன் இம்மாவட்டத்தில் பிரதான சேவை வழங்கும் மத்திய நிலையமாக செயற்படுகிறது. அதனால் சுகாதார சேவைக்கான கேள்வி அதிகரித்துள்ளதுடன் அத்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தேசிய வைத்தியசாலை மற்றும் சிறுவர் வைத்தியசாலையொன்றை நிறுவுவதற்கான அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்காக பியகம வடக்கு கிராம சேவகர் பிரிவில் காணப்படும் 7 ஏக்கரும் 3 ரூட்டுமான நிலப்பகுதி இரண்டை அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் ஊடாக தீர்மானிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் முன்வைத்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.