பாகுபலி ஒளிப்பதிவாளர் மனைவி காலமானார்

தெலுங்கு சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் கே.கே செந்தில்குமார். மகதீரா, ஈகா(நான்ஈ), பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பல வெற்றி படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜமவுலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் இவர் என்று சொல்லலாம். செந்தில்குமாரின் மனைவி ரூஹி. ஆரோக்கியம் மற்றும் பிட்னஸ் துறையில் ஆர்வம் கொண்டவர், யோகா பயிற்சியாளரும் கூட. பல தெலுங்கு பிரபலங்களுக்கு இவர் யோகா கற்று கொடுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த ரூஹி, செகந்திராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார். ரூஹி மறைவுக்கு பல்வேறு தெலுங்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரூஹியின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.