பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் – சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு

பொது நிர்வாக அமைச்சின் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், அரச கரும மொழிகள் ஆணைக்குழு, அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் ருஹுனு பல்கலைக்கழக சிங்கள கற்கைகள் பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொழும்பு இலங்கை மன்றத்தில் நேற்று (21) இடம்பெற்றது.

ருஹுனு பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி சங்கைக்குரிய அக்குரட்டியே நந்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தாரிக் ஆரிபுல் இஸ்லாம், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் வினோத் குமார முனசிங்க, ருஹுனு பல்கலைக்கழக உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் ஸுஜீவ அமரசேன , சிரேஷ்ட பேராசிரியர் சந்தகோமி கோபரஹேவா, தூதரக அதிகாரிகள், பல்கலைக்கழக பீடாதிபதிகள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.