பெங்களூரு :பெங்களூரில் உள்ள மிகப்பெரிய யு.பி., வணிக வளாகத்தில், பிரீமியம் கார் பார்க்கிங்கிற்கு, ஒரு மணி நேரத்திற்கு 1,000 ரூபாய் கட்டணம் என்ற அறிவிப்பு இணையத்தில் பரவி விவாதத்தை கிளப்பி உள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரின் கே.ஜி.ஹள்ளி பகுதியில் யு.பி., வணிக வளாகம் உள்ளது. வார விடுமுறை நாட்களில் இங்கு கூட்டம் அலைமோதும்.
இந்த மாலில் ஒரு பகுதியை, ‘பிரீமியம் கார் பார்க்கிங்’கிற்கு பிரத்யேகமாக ஒதுக்கியுள்ளனர். வாகன நெரிசலில் சிக்காமல் மிகச் சுலபமாக இங்கு கார்களை நிறுத்தவும், எடுக்கவும் முடியும். இந்த இடத்தில் காரை நிறுத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு 1,000 ரூபாய் கட்டணம் என அறிவிப்பு செய்துள்ளனர்.
இதை புகைப்படம் எடுத்து ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட, அது வேகமாக பரவி வருகிறது. இதை பார்க்கும் அனைவரும் தங்களின் கருத்தை கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். ‘மாதத் தவணை வாயிலாக கட்டணம் செலுத்தலாமா, பிரீமியம் பார்க்கிங் என்றால் காருக்கு மசாஜ் செய்வரா, ‘பெங்களூரு,
அமெரிக்காவின் சிலிக்கான் வேலியாகவே மாறிவிட முயற்சிக்கிறது’ என்றெல்லாம் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement