லிவிங்ஸ்டன் மனைவி ஆபரேஷனுக்கு உதவிய ரஜினி

பொதுவாக ரஜினி மற்றவர்களுக்கு அதிகம் செலவு செய்ய மாட்டார், நிறைய கணக்கு பார்ப்பார் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் அவர் மறைமுகமாக பல உதவிகளை செய்து வருகிறார். அவர் செய்யும் உதவிகள் அவ்வப்போது வெளிவருவது உண்டு. அந்த வகையில் நடிகர் லிவிங்ஸ்டன் மனைவியின் ஆபரேஷனுக்கு ரஜினி 15 லட்சம் கொடுத்து உதவிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதை லிவிங்ஸ்டனே தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: ‛‛என் மனைவி இன்று உயிரோடு இருக்க காரணமே ரஜினி சார் தான். பூஜை அறையில் அவர் படத்தையும் வைத்திருக்கிறோம். அவர் தான் எங்களுக்கு கடவுள். நான் உனக்கு சகோதரர் போல, வாங்கிக்கோ எனப் பணம் கொடுத்தார். அவர் ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க மருத்துவமனை கட்டப் போகிறார் எனவும் கேள்விப்பட்டேன். ரொம்பவும் நல்ல மனசுக்காரர்” எனக் கூறியுள்ளார்.

லிவிங்ஸ்டன் மனைவிக்கு இதயத்தில் ஓட்டை ஏற்பட்டிருந்தாகவும், அதை சரிசெய்ய 15 லட்சம் தேவைபட்டிருக்கிறது. இதுகுறித்து அவர் 'லால் சலாம்' படப்பிடிப்பில் இருந்தபோது நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார். தற்போது கடனில் இருக்கும் தன்னால் இவ்வளவு பணத்தை திரட்ட முடியாது என்று கூறியுள்ளார். இதனை கேள்விப்பட்ட ரஜினி, லிவிங்ஸ்டனை அழைத்து முதல் கட்டமாக 15 லட்சத்தை கொடுத்திருக்கிறார். இன்னும் தேவைப்பட்டால் தயங்காமல் கேட்கும்படியும் கூறியிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.