சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் தற்போது கேரளாவில் துவங்கியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார் நடிகர் விஜய். கேரளாவில் விஜய்க்கு தீவிர ரசிகர்கள் ஏராளமானோர் காணப்படுகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் விஜய் வருகையையொட்டி விமானநிலையத்தில் காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் விஜய்யை
