
வேல்ராஜ் தொடர்ந்து மற்றொரு ஒளிப்பதிவாளரை இயக்குனராக்கும் தனுஷ்
நடிகர் தனுஷ் தன்னை சுற்றியுள்ள சில நபருக்கு அவ்வப்போது வாய்ப்பளிப்பார். பிரபல ஒளிப்பதிவாளர் ஆன வேல்ராஜூக்கு வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் போன்ற படங்களை இயக்கும் வாய்ப்பை தனுஷ் தந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு ஒளிப்பதிவாளருக்கு இயக்குனர் வாய்பைப் அளித்துள்ளார் தனுஷ். அதன்படி, வுண்டார்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை தனுஷின் கதை, திரைக்கதையில் உருவாகும் படத்தை ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் இயக்குகிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.