சென்னை: சாம்சங் கேலக்சி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி எம் வரிசையில் எம்15 போன் அறிமுகமாகி உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.5 இன்ச் ஹெச்டி+ சூப்பர் AMOLED டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- ஆக்டாகோர் மீடியாடெக் டிமான்சிட்டி 6100+ சிப்செட்
- பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம் பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 4ஜிபி/6ஜிபி ரேம்
- 128ஜிபி ஸ்டோரேஜ் திறன்
- 6,000mAh பேட்டரி
- 25 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
- 5ஜி நெட்வொர்க்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- இந்த போனின் விலை ரூ.12,999 முதல் தொடங்குகிறது