
கதை நாயகன் ஆன நாகேஷ் பேரன்
நாகேஷின் பேரனும், ஆனந்த் பாபுவின் மகனுமான பிஜேஷ், சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்' படத்தில் நடித்தார். இந்த படம் இன்னும் வெளிவரவில்லை. அதன்பிறகு பிரபுதேவா நடித்த 'பொன் மாணிக்கவேல்' படத்தில் நடித்தார். இந்த படம் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் பிஜேஷ் 'வானரன்' என்ற படத்தின் மூலம் கதை நாயகன் ஆகியிருக்கிறார்.
இதை ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன், சுஜாதா ராஜேஷ் தயாரித்துள்ளனர். 'டூ' என்ற படத்தை இயக்கியிருந்த ஸ்ரீராம் பத்மநாபன், இயக்கியுள்ளார். அக்ஷயா, ஜீவா தங்கவேல், தீபா சங்கர், ஆதேஷ் பாலா, எஸ்.எல்.பாலாஜி, பேபி வர்ஷா, நாஞ்சில் விஜயன், வெங்கட்ராஜ், சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் நடித்துள்ளனர். நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்ய, ஷாஜகான் இசை அமைத்துள்ளார். 'பகல் வேஷம்' என்ற பாரம்பரிய கலைஞர்கள் ஆஞ்சநேயர் வேடம் அணிந்து வாழ்க்கை நடத்துவதை பற்றிய படம்.